உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் மின்விளக்கு பராமரிப்பு படுமோசம்

பொன்னேரியில் மின்விளக்கு பராமரிப்பு படுமோசம்

பொன்னேரி:பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் இருந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் ஓரங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன.மின்விளக்குகளை 'ஆன்' 'ஆப்' செய்வதற்காக ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள 'ஸ்விட்ச் பாக்ஸ்'கள் உடைந்து திறந்த நிலையில் கிடக்கின்றன.ரயில்வே ஊழியர்கள் யாரும் வராத நிலையில், வழிபோக்கர்கள், ரயில்பயணியர் இந்த மின்விளக்குகளை மாலையில் 'ஆன்' செய்து, காலையில் ஆப் செய்கின்றனர்.ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்சாதனங்களினால் வழிப்போக்கர்கள் மற்றும் ரயில் பயணியர் அசம்பாவிதங்களில் சிக்கும் அபாயம் உள்ளதுமேலும், இந்த சாலையில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் சரிவர எரியாமல், கம்பங்களில் செடிகள் சூழ்ந்தும் இருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருண்டு கிடக்கும் பகுதிகள் வழியாக செல்லும் பயணியர் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.ரயில் நிலைய சாலையில் உள்ள மின்விளக்குகளையும் மின்சாதனங்களையும் உரிய முறையில் ரயில்வே நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ