| ADDED : ஜூலை 23, 2024 09:20 PM
பொன்னேரி:மின்கட்டண உயர்வை கண்டித்து, திருவள்ளூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க, சார்பில் நேற்று பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலர் சிறுணியம் பலராமன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்று பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தியால், ஏழை மக்கள் வேதனையில் தவிக்கின்றனர். இந்த மின்கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.லோக்சபா தேர்தலில், தி.மு.க., விற்கு ஓட்டளித்த மக்களுக்கு கிடைத்த பரிசுதான் இந்த மின்கட்டண உயர்வு. தமிழகத்தில் நடைபெறும் இந்த மோசமான ஆட்சி, வீட்டிற்கு அனுப்ப வேண்டும். சட்டசபை தேர்தலை இந்தநாடே எதிர்நோக்கிக் காத்திருக்கிறது.வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் இந்த ஆட்சி கவிழும். இவ்வாறு அவர் கூறினார்.