உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மெத்தை, தலையணை கடையில் தீ விபத்து

மெத்தை, தலையணை கடையில் தீ விபத்து

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்சா, 38. பாரதியார் தெருவில் மெத்தை, தலையணை தயாரிக்கும் கடை நடத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மதியம் 3:00 மணியளவில் திடீரென தீப்பிடித்ததில், கடையில் இருந்த பெட், தலையணை தையல் மிஷின் என 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கடையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மணவாள நகர் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ