உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கால்நடை தீவன சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

கால்நடை தீவன சேமிப்பு கிடங்கில் தீ விபத்து

திருத்தணி, திருத்தணி அடுத்த முருகூர் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் சந்திரசேகரன், 44. இவர் அகூர் ஊராட்சி பாபிரெட்டிப் பள்ளி அருகே, நெல்லில் இருந்து பிரித்து எடுக்கும் தவிடு கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனம் மற்றும் மீன்களுக்கு வழங்கப்படும் தீவனம் போன்றவற்றை, கிடங்கில் வைத்து, விற்பனை செய்கிறார்.இந்த கிடங்கில், 20க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று காலை, 7:00 மணிக்கு, மின்கசிவால், தீவனக் கிடங்கில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மூடியிருந்த கிடங்கில், புகை வெளியேறுவதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து, கிடங்கின் உரிமையாளர் சந்திரசேகரன் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தொடர்ந்து, திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன், 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்து கிடங்கின் தீயை அணைத்தனர். 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தீவன மூட்டைகள் தீயில் எரிந்து சாம்பலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ