உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீரராகவர் கோவிலில் கருட வாகன சேவை

வீரராகவர் கோவிலில் கருட வாகன சேவை

திருவள்ளூர்:திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 15ம் தேதி துவங்கியது. தினமும் காலை, மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, உற்சவர் வீரராகவர் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை நேற்று நடந்தது. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்தனர். அதிகாலை 4:00 மணிக்கு வீரராகவ பெருமாள், கருட வாகனத்தில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை 5:30 மணியளவில், கருட வாகனத்தில் திருவீதி உலா வந்தார். மதியம் திருமஞ்சனமும், மாலை ஹனுமந்த வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இன்று சேஷ வாகனமும், மாலை சந்திர பிரபையும் நடக்கிறது.

ராட்சத பந்தல்

பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது, கோடைக்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால், பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர்.இதையடுத்து, வீரராகவர் கோவில் முன், பக்தர்கள் இளைப்பாறுவதற்காக பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ