மேலும் செய்திகள்
ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் கைது
3 hour(s) ago
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா
3 hour(s) ago
தண்ணீர் நிரம்பாத குளம் சீரமைக்க வேண்டுகோள்
3 hour(s) ago
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
திருத்தணி: அரக்கோணம் லோக்சபா தொகுதியின் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் அறிமுக கூட்டம் நேற்று திருத்தணியில் நடந்தது. இதில், வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பேசியதாவது: கடந்த 40 ஆண்டுகளாக அரக்கோணம் லோக்சபா தொகுதி மக்கள் அனைவரையும் எனக்கு தெரியும். குறிப்பாக, திருத்தணி சட்டசபை தொகுதி மக்கள் என் மேல் உயிரே வைத்துள்ளனர். இந்த தொகுதியில் எனக்கு தெரியாத நபர்கள் யாரும் கிடையாது. எப்போதும் என்னை தங்களது வீட்டுப் பிள்ளையாக பார்க்கின்றனர்.நானும், திருத்தணி தொகுதி மக்களும் ஒன்றோடு ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இந்த தொகுதி மக்களுக்காக என் உயிரையும் கொடுப்பதற்கு தயாராக உள்ளேன். மக்களுக்கு எந்த உதவியும் செய்வதற்கு தயாராக உள்ளேன். நான் இறந்தால், என் சாம்பல் திருத்தணி தொகுதியில் துாவ வேண்டும்.இவ்வாறு கண்ணீர் மல்க உருக்கமாக பேசினார். பின், கைத்தறி துறை அமைச்சர் காந்தி பேசியதாவது: அரக்கோணம் லோக்சபா தொகுதியில் மீண்டும் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவரை தமிழகத்திலேயே அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராமம், நகரம் தோறும் வீடு, வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில் தி.மு.க.,- எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி சந்திரன், திருவள்ளூர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago