மேலும் செய்திகள்
காட்டுப்பன்றிகளால் நெற்பயிர்கள் வீண்
04-Mar-2025
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி, பாகசாலை பகுதியில், இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் விவசாயிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.தற்போது, கிராமங்களில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் பேரம்பாக்கம் -- திருவாலங்காடு சாலை, உரியூர் சாலை, செஞ்சி சாலைகளில் காட்டுப்பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.வேளாண் பயிர்களை சேதப்படுத்துவதுடன், சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோரை காயப்படுத்தி செல்கின்றன. இதனால், இச்சாலையில் இரவு நேரங்களில் பயணிப்போர் அச்சமடைந்து வருகின்றனர். மேலும், காட்டுப்பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.எனவே, காட்டுப்பன்றி தொல்லைக்கு வனத்துறையினர் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
04-Mar-2025