உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்

திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா துவக்கம்

திருத்தணி:திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா, கடந்த, 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடைபெறும் விழாவில் தினமும் காலையில், 7:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் நடைபெறும். நாளை முதல் இரவு, 10:00 மணிக்கு மகா பாரத நாடகமும், 12ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான இன்று காலை பாண்டவர் ஜனனம், நாளை பக்காசூரன் சாதம், 1ம் தேதி, திரவுபதியம்மன் திருமணம், 3ம் தேதி காலையில் சுபத்திரை அம்மன் திருமணம் மற்றும் திருவிளக்கு பூஜை நடக்கிறது.வரும், 6ம் தேதி அர்சுனன் தபசும், 12ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம், பகல் 11:40 மணிக்கு அக்னிவளர்த்தல், மாலை, 6:30 மணிக்கு தீ மிதி விழாவும், 13ம் தேதி காலை 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிேஷகத்துடன் தீமிதி விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ