உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உரம் விற்பனையில் முறைகேடு செய்தால் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

உரம் விற்பனையில் முறைகேடு செய்தால் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர்:உரம், பூச்சி மருந்து விற்பனையில் முறைகேடு நடந்தால் விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், தற்போது ரபி பருவம் தொடங்கி உள்ளதால், விவசாயிகள் நெல் பயிரிட ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை நிலையங்களில், எம்.ஆர்.பி., விலையை விட கூடுதல் விலைக்கு உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு ரசீது கொடுக்க மறுப்பது உள்ளிட்ட தவறுகளில் ஈடுபட்டால், உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 மற்றும் பூச்சி மருந்து சட்டம் 1968ன்படி கடும் நடவடிக்கை எடுத்து, உரம் மற்றும் பூச்சிமருந்து விற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.ஆதார் எண், பயிர் சாகுபடி செய்யும் நிலப்பரப்பு மற்றும் பயிரிடும் பயிர் விவரம் பெற்று அதன்படி உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை செய்ய வேண்டும். வேளாண் துறை அலுவலர்கள், வாரம் ஒருமுறை உரம் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், உரம் மற்றும் பூச்சி மருந்து மாதிரி எடுத்து ஆய்விற்கு அணுப்பி அதன் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை விற்பனை செய்யாமல் செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்துவது, கூடுதல் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துதல், அதிக விலைக்கு விற்பனை செய்வது மற்றும் விவசாயிகள் அல்லாதோருக்கு விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை