உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

திருவள்ளூரில் ஜமாபந்தி நிறைவு

திருவள்ளூர்:திருவள்ளூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. திருவள்ளூர் ஆர்.டி.ஓ.,கற்பகம், தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் மனுக்கள் பெற்றனர்.மொத்தம், 987 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது உடனடி தீர்வு கண்டு,75 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, 93 பேருக்கு உட்பிரிவு பட்டா, 42 பேருக்கு பட்டா மாற்றம், 18 பேருக்கு கிராம நத்தம் பட்டா மற்றும் 7 பேருக்கு ஜாதி சான்றிதழ் என, 235 பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் மற்றும் ஆணைகளை ஆர்.டி.ஓ., கற்பகம் வழங்கினார். மீதமுள்ள மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் தாசில்தார் வாசுதேவன், ஒன்றிய சேர்மன் ஜெயசீலிஜெயபாலன், பி.டி.ஓ.,க்கள் குணசேகரன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி