உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி --- கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்க கோரிக்கை

கும்மிடி --- கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், 330 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், தமிழகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள், கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்றனர். விேஷச நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஆரம்பத்தில் நேரடியாக கோயம்பேடு சென்று பேருந்து பிடித்து சொந்த ஊருக்கு சென்று வந்தனர். மாதவரம் பேருந்து நிலையம் வந்த பின், இரண்டு பேருந்துகளில் பயணித்து கோயம்பேடு சென்றனர்.தற்போது கிளம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல மூன்று பேருந்துகள் மாறி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நகரமான கும்மிடிப்பூண்டியில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை