மேலும் செய்திகள்
ரவுடி கொலை வழக்கில் மூன்று பேர் கைது
3 hour(s) ago
திருத்தணி கோவிலில் கிருத்திகை விழா
3 hour(s) ago
தண்ணீர் நிரம்பாத குளம் சீரமைக்க வேண்டுகோள்
3 hour(s) ago
சாலையில் பாயும் ஊற்று நீர் வாகன ஓட்டிகள் அவதி
3 hour(s) ago
ஊத்துக்கோட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. இச்சாலையில் தினமும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். பஜார் பகுதியில் போலீஸ் நிலையம், பேரூராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளது. இதில் நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு அவ்வழியே வந்த லாரி ஒன்று பேரூராட்சி அலுவலகம் முன் இருந்து மின்கம்பம் மீது மோதியது.இதில் மின்கம்பம் பலத்த சேதம் அடைந்து, அடிப்பாகம் சாய்ந்தது. இதனால் அப்பகுதியில் மின் வினியோம் தடைபட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்துக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள் சீர்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். உடைந்த மின்கம்பத்திற்கு பதில் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டு, தொடர்ந்து மின் வினியோகம் வழங்கப்பட்டது.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago