உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போனவர் சடலமாக கண்டெடுப்பு

பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 45; மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர், கடந்த 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.இது குறித்து அவரது சகோதரர் நேற்று முன்தினம் பொதட்டூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், ஆர்.கே.பேட்டை அருகே, தனியார் பள்ளி ஒன்றின் சுற்றுச்சுவரை ஒட்டி ஆண் சடலம் கிடப்பதாக, ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு, நேற்று தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரின் விசாரணையில், அந்த சடலம் காணாமல் போன ஜெகதீசன் என்பது தெரியவந்தது.இதுகுறித்து, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை