உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாட்டு தொழுவமான பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

மாட்டு தொழுவமான பாலம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துார் ஊராட்சி, பேரம்பாக்கம் நெடுஞ்சாலையின் குறுக்கே, கொசஸ்தலை ஆற்றின் ஏரி வரத்து கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல, குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த உயர்மட்ட பாலத்தை, சிலர் மாடுகளை கட்டி வைத்து தொழுவமாக மாற்றி வருகின்றனர்.இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கானோர், இருசக்கர வாகனம் வாயிலாக மப்பேடு, ஸ்ரீ பெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகின்றனர்.அவர்கள், உயர்மட்ட பாலத்தின் செல்லும்போது, அங்கு வரும் மாடுகளால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர். இதனால், மாடுகள் கட்டப்படுவதால், பாலத்தின் சுற்றுச்சுவர் சேதமாகும் அபாயம் உள்ளது. மாடுகள் கட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ