உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் அவதி

கீழ்மணம்பேடு, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், பூந்தமல்லி ஒன்றியத்துக்குட்பட்ட மேல்மணம்பேடு ஊராட்சியில், கீழ்மணம்பேடு அமைந்துள்ளது.இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலை வழியே, தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இப்பகுதியில், நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை, துப்புரவு பணியாளர்கள் சேகரித்து, சாலையோரம் ஆங்காங்கே குவித்து எரித்து வருகின்றனர்.இதனால் ஏற்படும் புகையால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், மூச்சுத் திணறல் போன்றவற்றால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை மாவட்ட கலெக்டர் எச்சரித்தும், ஊராட்சியில் உள்ள துப்புரவு பணியாளர்கள் அலட்சியப்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்போர் மீது ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ