உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சீத்தஞ்சேரியில் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

சீத்தஞ்சேரியில் நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

ஊத்துக்கோட்டை, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில் சீத்தஞ்சேரி கிராமம் உள்ளது. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி வாசிகளின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கூலி வேலை.தினமும், 10,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும் சீத்தஞ்சேரியில் இருந்து, கூனிப்பாளையம், பென்னலுார்பேட்டை, திம்மபூபாலபுரம், பிளேஸ்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது.இந்த நிலையில், சீத்தஞ்சேரி பகுதியில் சாலை குறுகலாக உள்ளதால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், சீத்தஞ்சேரி பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை