| ADDED : மே 07, 2024 06:44 AM
சென்னை: சி.எம்.டி.ஏ.,வின் சமூக வலைதள பக்கங்களில், கடந்த சில மாதங்களாக விதிமீறல் கட்டடங்கள் தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், 2023 முதல் விதிமீறல் கட்டடங்களுக்கு வழங்கிய பணி நிறுத்த நோட்டீஸ்கள் குறித்து, பொறியாளர் ஒருவரின் கேள்விக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அளித்த பதில்: சி.எம்.டி.ஏ., அனுமதி இன்றியும், அனுமதி விதிகளுக்கு மாறாகவும், கட்டுமான பணிகள் நடப்பதாக புகார் வந்தால் ஆய்வு செய்து, பணிகளை நிறுத்த நோட்டீஸ் அளிப்பர். இதனால், பணிகள் முழுமையாக நிறுத்தப்படும். தற்போது, புகார் தெரிவிக்கப்படும் கட்டடங்களுக்கு பணி நிறுத்த நோட்டீஸ், 2023 முதல் வழங்கப்படுவது இல்லை. அதற்கு பதிலாக, அந்த கட்டடம் விதிப்படி இருக்கிறது அல்லது அனுமதி பெறப்பட்டது என்பதற்கான ஆதார ஆவணங்களை கேட்டு, நோட்டீஸ் மட்டுமே அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.