| ADDED : ஜூலை 27, 2024 07:10 AM
பள்ளிப்பட்டு, : பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து பொதட்டூர்பேட்டைக்கு ஏரிக்கரை வழியாக தார் சாலை வசதி உள்ளது. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் வரை, பள்ளிப்பட்டு கூட்டு சாலை வழியாக மட்டுமே பொதட்டூர்பேட்டைக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த 1990களில் இந்த மார்க்கத்தில் அரசு பேருந்து தடம் எண்: 10வி இயக்கப்பட்டது. அதை தொடர்ந்து இருசக்கர வாகனங்களும் அதிகளவில் இந்த ஏரிக்கரை வழியாக பயணிக்க துவங்கின. பிரபலம் அடைந்த சாலையில் பயணிக்கும் பயணிகளுக்காக, அத்திமாஞ்சேரிபேட்டை ஏரிக்கரை சாலையில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. தினசரி 1,000த்திற்கும் மேற்பட்டோர் இந்த நிறுத்ததில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோக்களில் பயணிக்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள பயணிகள் நிழற்குடை பராமரிப்பு இன்றி சீரழிந்து வருகிறது. தற்போது, ஏராளமான விளம்பர பேனர்கள், நிழற்குடையை ஆக்கிரமித்துள்ளன. இதனால், பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.