மேலும் செய்திகள்
லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் பலி
09-Feb-2025
திருவாலங்காடு:மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் கோபிநாத், 25. இவர் நேற்று காலை டொயோட்டா இடியாஸ் காரில் ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்றார்.சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கனகம்மாசத்திரம் அடுத்த புதுார் அருகே வந்தபோது எதிரே திருத்தணி நோக்கி சென்ற பொலிரோ கார் கோபிநாத் வந்த கார் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த கோபிநாத்தை மீட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
09-Feb-2025