உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.27 கோடி மோசடி வழக்கு ஒருவர் கைது

ரூ.27 கோடி மோசடி வழக்கு ஒருவர் கைது

ஆவடி: நாகப்பட்டினம், ஆலியூரைச் சேர்ந்தவர் அகமது கபீர், 79. இவர், கடந்த 1996ல், சிங்கப்பூரில் வேலை செய்த போது, மலேஷியாவைச் சேர்ந்த செல்வேந்திரன் என்பவர் பழக்கமாகி உள்ளார்.செல்வேந்திரன் ஆலோசனைப்படி, சென்னையில் உள்ள காதர் என்பவரை பங்குதாரராக சேர்த்து, மூவரும் சேர்ந்து பூந்தமல்லி அடுத்த திருமழிசையில், 2017ல் ஒரு நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.பின், 5 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கிய கம்பெனியை, காதர் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.அதைத் தொடர்ந்து செல்வேந்திரன், அகமது கபீர் இருவருக்கும் உரிய, 'செட்டில்மென்ட்' தொகையை வழங்குவதாக காதர் உறுதியளித்துள்ளார்.இந்நிலையில், காதரிடமிருந்து அகமது கபீருக்கு வர வேண்டிய செட்டில்மென்ட் தொகை, 27 கோடி ரூபாயை, பாஸ்கர் என்பவரின் உதவியுடன், போலி ஆவணங்கள் தயாரித்து செல்வேந்திரன் ஏமாற்றி உள்ளார்.இதையடுத்து செல்வேந்திரன், பாஸ்கர் ஆகியோர் மீது, ஆவடி குற்றவியல் போலீசாரிடம், அகமது கபீர் புகார் அளித்தார்.புகாரை விசாரித்த போலீசார், நாகப்பட்டினம், புலியூரைச் சேர்ந்த பாஸ்கர், 56, என்பவரை நேற்று கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ