உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு

அரண்வாயல்:திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயநிலா, 40. இவரது இடத்தில் ஏர்டெல் நிறுவனத்தினர் டவர் அமைக்கும் பணி நேற்று நடந்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நவமணி தலைமையில் 25க்கும் மேற்பட்டோர் அப்பகுதிக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெற்று டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை நிறுத்த வேண்டுமென கூறி, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த செவ்வாப்பேட்டை போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் அரசு அனுமதி வாங்கி டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நீங்கள் கலெக்டரிடம் சென்று புகார் அளியுங்கள் என்று கூறியதையடுத்து பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !