உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓசோன் தினம் விழிப்புணர்வு

ஓசோன் தினம் விழிப்புணர்வு

திருவள்ளூர்: திருவள்ளூரில் நேற்று சர்வதேச ஓசோன் விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், சர்வதேச ஓசோன் தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை, திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர்.தொழிற்சாலை பணியாளர், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற பேரணி திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில், மஞ்சப்பை, மரக்கன்று மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ