உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மண் குவாரி லாரிகளால் சகதியான தடப்பெரும்பாக்கம் - ஆமூர் சாலை

மண் குவாரி லாரிகளால் சகதியான தடப்பெரும்பாக்கம் - ஆமூர் சாலை

பொன்னேரி: பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் பாசன ஏரியில் மண் அள்ளுவதற்கு குவாரி செயல்பட அனுமதிக்கப்பட்டு உள்ளது.இந்த ஏரியில் அள்ளப்படும் மண், காட்டப்பள்ளி --- தச்சூர் இடையே மேற்கொள்ளப்படும் சென்னை எல்லை சாலைத்திட்டத்திற்கு பயன்படுத்தபடுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.அனுமதிக்கப்பட்ட இடத்துடன் மேலும் சில இடங்களில் லாரி உரிமையாளர்கள் சிலர், தனியார் நிறுவனங்களுக்கும், தனிநபர் பயன்பாட்டிற்கும் என மண் அள்ளுகின்றனர்.இதனால் நாள்முழுதும் தடப்பெரும்பாக்கம் - ஆமூர் சாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மண் அள்ளி செல்கின்றன. தொடர்ந்து மண் லாரிகள் சென்று வருவதால், சாலை முழுதும் சேதம் அடைந்து உள்ளது. அதிக சுமையின் காரணமாக ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அங்கு தற்காலிக தீர்வமாக களிமண் கொண்டு மூடப்பட்டு உள்ளது. அவ்வப்போது பெய்து வரும் மழையால் களிமண் கரைந்து, சாலை முழுதும் சகதியாக மாறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தாமல், மாற்று வழித்தடத்தில் பயணிக்கின்றனர். அவசர மருத்துவ உதவிக்கு பொன்னேரி செல்ல முடியாத நிலையில் தடப்பெரும்பாக்கம், வடக்குப்பட்டு, ஆமூர் கிராமவாசிகள் தவிக்கின்றனர்.மேற்கண்ட சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சவுடு மணல் லாரி மோதி

அரசு பள்ளி ஆசிரியர் காயம்திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர் கனிராஜ், 58. இவர் மேல்நல்லாத்துார் ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை பள்ளிக்கு ஹீரோ ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஈஸ்வரி திருமண மஹால் அருகே வந்த சவுடு மணல் லாரி மோதியது.இதில் படுகாயமடைந்த கனிராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திருவள்ளூர் தாலுகா போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை