இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு
திருத்தணி:திருத்தணி சலவை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வருவாய் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில், சொந்த வீடுகள் இல்லாத சலவை தொழிலாளர்கள் மற்றும் இதர சமுதாயத்தை சேர்ந்தவர்கள், 80க்கும் மேற்பட்டோர் திருத்தணி நகரில் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வீட்டு வாடகை கூட கட்டமுடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, அரசு வழங்கும் இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்ற கோட்டாட்சியர் தீபா நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.