உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மனுக்கள் பதிவு செய்ய கூடுதல் கவுன்டர் திறக்க மனு

மனுக்கள் பதிவு செய்ய கூடுதல் கவுன்டர் திறக்க மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்ய, கூடுதல் 'கவுன்டர்' அமைக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் வேணுகோபால் கலெக்டரிடம் அளித்து உள்ள மனு:திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 100 கி.மீட்டர் துாரம் பயணித்து மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில், குறைவான எண்ணிக்கையிலேயே ஊழியர்கள் இருப்பதால், மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.எனவே, கம்ப்யூட்டரை அதிகப்படுத்தி, மனுக்கள் பதிவு செய்யும் 'கவுன்டர்'களை இரட்டிப்பாக்க வேண்டும். மனுக்களை பதிவு செய்ய, இணையதளம் மெதுவாக இயங்குவதால், நீண்ட நேரம் ஆகிறது. எனவே, '5ஜி' சேவையை பயன்படுத்த வேண்டும். மேலும், மனு பதிவு செய்ய இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ