உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி - கிளாம்பாக்கம் பேருந்து நேரடியாக இல்லாமல் பயணியர் தவிப்பு

பொன்னேரி - கிளாம்பாக்கம் பேருந்து நேரடியாக இல்லாமல் பயணியர் தவிப்பு

பொன்னேரி:பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், திருச்சி, அரியலுார், மதுரை உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.இவர்கள் விடுமுறை நாட்களிலோ அல்லது அவசர பயணமாகவோ, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு நிலையம் சென்று பேருந்து பிடிப்பர்.இதற்கு பொன்னேரியில் இருந்து கோயம்பேடு செல்லும் நேரடி பேருந்துகள் அல்லது, செங்குன்றம் சென்று, அங்கிருந்து கோயம்பேடு செல்லும் பேருந்துகளை பயன்படுத்தினர்.இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கம் பகுதிக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. இதனால் பயணியர் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.இது குறித்து பயணியர் கூறியதாவது:பொன்னேரியில் இருந்து செங்குன்றத்திற்கு ஒரு பேருந்து, அங்கிருந்து மாதவரம் செல்ல ஒருபேருந்து, கிளாம்பாக்கத்திற்கு மற்றொரு பேருந்து என மூன்று பேருந்துகளை பிடிக்க வேண்டும்.இதனால் பண விரயம், காலவிரயம் ஏற்படுகிறது. பொன்னேரியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு குறைந்த கட்டணத்தில் நேரடி பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், பொன்னேரியில் இருந்து நேரடியாக திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அவை மீண்டும் இயக்கப்படாமல் உள்ளன. மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ