மேலும் செய்திகள்
பட்டாக்கத்தியால் கேக் வெட்டி இன்ஸ்டாவில் பதிவு: 3 பேர் கைது
20 hour(s) ago
திருத்தணி அரசு பள்ளியில் பனை விதைகள் நடவு
20 hour(s) ago
ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
20 hour(s) ago
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஏருசிவன், மடிமைகண்டிகை, வஞ்சிவாக்கம் உள்ளிட், 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கிராமவாசிகள் கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு பொன்னேரி நகரப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டும்.மேற்கண்ட கிராமங்கள் வழியாக பேருந்து சேவை இயக்கப்படுவதில்லை. இங்குள்ளவர்கள், 3 கி. மீ. தொலைவில் உள்ள உப்பளம், தேவராஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு சென்று பேருந்து பிடிக்கும் நிலை உள்ளது.இதனால் கிராமவாசிகள், பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்களின் கல்வியும் பாதிக்கிறது. பொன்னேரியில் இருந்து மேற்கண்ட கிராமங்கள் வழியாக வஞ்சிவாக்கம் வரை பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கிராமவாசிகள் பொன்னேரி தாசில்தார் மதிவாணனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:எங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதியில்லாததால், 3 கி.மீ., தொலைவில் உப்பளம் பேருந்து நிறுத்ததிற்கு செல்லும்போது வழிப்பறி, செயின்பறிப்பு சம்பவங்கள் நடைபெறுகிறது. தேவராஞ்சேரி பேருந்து நிறுத்தம் சென்றால் அங்கு குடிகாரர்கள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அங்குள்ள பேருந்து நிழற்குடை மதுகூடமாக மாறி உள்ளது. பொன்னேரியில் இருந்து எங்கள் கிராமங்கள் வழியாக பழவேற்காடு வரை பேருந்து இயக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago