உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரி ஜமாபந்தி நிறைவு

பொன்னேரி ஜமாபந்தி நிறைவு

பொன்னேரி:பொன்னேரி வட்டத்திற்கான ஜமாபந்தி நிகழ்வு, கடந்த, 7 ம் தேதி சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் துவங்கியது. பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், உள்ளிட்ட ஒன்பது குறுவட்டங்களில், 200க்கும் அதிகமான வருவாய் கிராமங்கள் உள்ளன.மேற்கண்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் ஜமாபந்தியில் பங்கேற்று பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, வாரிசு சான்று, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.இறுதிநாளான நேற்றுடன் பொதுமக்களிடம் இருந்து, மொத்தம், 1,109 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 249 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டன.நிறைவு நாள் விழாவில், பொன்னேரி காங்.,- - எம்.எல்.ஏ., துரைசந்திரசேகர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பயனாளிகளுக்கு பட்டா, குடும்ப அட்டை உள்ளிட்ட சான்றுகளை வழங்கினார். பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை