மின் உற்பத்தி 2 வாரம் நிறுத்தம்
சென்னை:திருவள்ளூர் மாவட்டம், வல்லுாரில் தேசிய அனல் மின் கழகம் மற்றும் தமிழக மின் வாரியத்திற்கு, கூட்டு அனல் மின் நிலையம் உள்ளது.இங்கு தலா, 500 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 1,060 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. வல்லுார் மின் நிலையத்தின் மூன்றாவது அலகில், 'டர்பைன்' சோதனைக்காக, நேற்று முன்தினம் முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அந்த அலகில் இம்மாதம், 27ம் தேதி, மீண்டும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.