உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்கோபுர விளக்கு சீரமைக்கும் பணி

மின்கோபுர விளக்கு சீரமைக்கும் பணி

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா விமர்சையாக நடக்கும்.இந்த விழாவில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை விழா ஜூலை 27ம் தேதி ஆடி அஸ்வினியுடன் துவங்குகிறது. 28ம் தேதி ஆடிபரணி, 29ம் தேதி ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து, 30ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 31ம் தேதி மூன்றாம் நாள் தெப்ப திருவிழாவுடன் ஆடிக்கிருத்திகை விழா நிறைவடைகிறது.ஆடிக்கிருத்திகை விழாவை ஒட்டி நேற்று, மலைக்கோவிலில் உள்ள உயர்மின்கோபுர விளக்குகள் பழுதுபார்க்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி