உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

புட்லுார்- அரண்வாயல் சாலை சேதம் வாகன ஓட்டிகள் பரிதவிப்பு

திருவள்ளூர்:புட்லுாரில் இருந்து அரண்வாயல் செல்லும் சாலை முழுதும், குண்டும், குழியுமாக சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.சென்னை-பூந்தமல்லி சாலையில் அரண்வாயல் கிராமம் உள்ளது. இங்கிருந்து, புட்லுார் வழியாக, திருவள்ளூர்-ஆவடி சாலையை இணைக்கும் வகையில், 6 கி.மீட்டர் துாரத்தில் சாலை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக, தினமும், நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.புட்லுார் ரயில் நிலையம், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், காக்களூர் தொழிற்பேட்டைக்கு, பக்தர்கள், தொழிலாளர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.அரண்வாயலில் இருந்து 6 கி.மீட்டர் துாரம் உள்ள இச்சாலை முழுதும், தார் பெயர்ந்து, ஆங்காங்கே, குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. சில இடங்களில், கடந்த மாதம் பெய்த மழையால், சாலையில் அரிப்பு ஏற்பட்டு, தார், ஜல்லி பெயர்ந்து, பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.இதன் காரணமாக இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் வாகன ஓட்டிகள், சாலை பள்ளத்தில், கீழே விழுந்து, காயமடைய நேரிடுகிறது.எனவே, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் நேரடியாக இச்சாலையில் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக பாதிப்பை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறு, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை