உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூடல்வாடி பட்டரை ஏரியில் மீன்பாசி குத்தகை ஏலம் விட கோரிக்கை

கூடல்வாடி பட்டரை ஏரியில் மீன்பாசி குத்தகை ஏலம் விட கோரிக்கை

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது கூடல்வாடி பட்டரை ஏரி 35 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த ஏரி நீர் வாயிலாக திருவாலங்காடு, கூடல்வாடி கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் 200 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஆண்டுதோறும் ஏரி மீன்பாசி குத்தகை ஏலம் விடப்பட்டு அதன் வாயிலாக வரும் வருவாயை கொண்டு ஏரி பராமரிப்பை அதிகாரிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் கவனித்து வந்தனர்.தற்போது, 2024 --- 25ம் ஆண்டுக்கான ஏலம் ஜனவரியில் நடந்தது. அப்போது உள்ளூர் வாசிகளின் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.பின் இரண்டாவது முறை மார்ச் மாதமும் இதே நிலை நீடித்தது. இதனால் இருமுறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. பின் இதுவரை ஏல தேதி அறிவிக்கப்படவில்லை.இதனால் விவசாயிகள் ஏரியை பராமரிக்க பணம் இன்றி சிக்கல் எழும் நிலை உள்ளதாக புலம்புகின்றனர். இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை மீன் பாசி குத்தகை ஏலம் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை