உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நாராயணபுரத்தில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

நாராயணபுரத்தில் ரேஷன் கடை அமைக்க கோரிக்கை

பூண்டி:பூண்டி ஒன்றியம் பட்டரைபெரும்புதுார் ஊராட்சிக்கு உட்பட்டது நாராயணபுரம் கிராமம். இங்கு கிராமம், காலனியில் 100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.இவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக 2 கி.மீ., துாரத்தில் உள்ள வரதாபுரத்திற்கு சென்று வருகின்றனர். வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை வழியாக ரேஷன் பொருட்களை வாங்க செல்லும் பெண்கள் முதியவர்கள் ரேஷன் பொருட்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சிலர் விபத்தில் சிக்குவதாக புலம்புகின்றனர்.எனவே நாராயணபுரம் பகுதியில் ரேஷன் கடை அமைத்து பொருட்களை வினியோகிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ