மேலும் செய்திகள்
கற்கள் பெயர்ந்த குமாரசேரி சாலை
20-Feb-2025
கடம்பத்துார்:கடம்பத்துார் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே ஏகாத்தம்மன் கோவில், பெரிய தெரு, ரயில் நிலையம் வழியாக அதிகத்துார், மணவாளநகர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியே தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிமின்ட் சாலை தற்போது கற்கள் பெயர்ந்த மோசமான நிலையில் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் உட்பட இப்பகுதிவாசிகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையை சீரமைக்க கோரி பலமுறை புகார் அளித்தும் ஒன்றிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையை சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Feb-2025