உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி

பராமரிப்பில்லாத பயணியர் நிழற்குடை வெங்கத்துார் பகுதிவாசிகள் அவதி

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது வெங்கத்துார் ஊராட்சி. இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள நிழற்குடையை பயன்படுத்தி இப்பகுதிவாசிகள் திருவள்ளூர் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ள நிழற்குடை முறையான பராமரிப்பில்லாததால் சேதமடைந்து பரிதாபமான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதிவாசிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென வெங்கத்துார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை