| ADDED : ஜூலை 26, 2024 10:56 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று நிற்காமல் சென்றது. போலீசார் துரத்தி சென்று பிடித்தனர். ஆந்திராவில் இருந்து, ஆறு யூனிட் மணல் கடத்தியது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார் அதன் டிரைவர் ஆந்திர மாநிலம், தடா பகுதியை சேர்ந்த நாகராஜூ, 39, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மாதர்பாக்கம் அருகே கீமளூர் கிராமத்தில் பாதிரிவேடு போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது, அவ்வழியாக, எந்த அனுமதியும் இன்றி, கிராவல் மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர். அதன் டிரைவர் தப்பி ஓடினார். பாதிரிவேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.