உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார், பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு அருகே வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அனுமதியின்றி, ஆறு யூனிட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் உடன் பயணித்த, தாமரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த உலகநாதன், 30, என்பவரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ