உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருமழிசையில் கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடைகள்

திருமழிசையில் கழிவுநீர் சூழ்ந்த பயணியர் நிழற்குடைகள்

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட குண்டுமேடு பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி அருகே நெடுஞ்சாலையோரம் நிழற்குடையை பகுதிவாசிகள் பயன்படுத்தி பூந்தமல்லி, சென்னை மார்க்கமாக சென்று வருகின்றனர்.இப்பகுதியில் முறையாக கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் நெடுஞ்சாலையோரம் நிழற்குடை அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது.இதேபோல் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருமழிசைக்கு வரும் நுழைவு பகுதியில் உள்ள நிழற்குடையும் கழிவுநீருடன் மழைநீர் சேர்ந்து குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இந்த நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பயணியர் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகுகாரிகள் நிழற்குடையை சூழ்ந்துள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணியர் மற்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !