| ADDED : ஜூலை 11, 2024 01:17 AM
திருத்தணி:சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மேதினாபுரம் பகுதியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரி முதலாமாண்டு மாணவியரை வரவேற்கும் நிகழ்ச்சி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி தாளாளர் எஸ். பாலாஜி தலைமை வகித்தார். முதல்வர் வேதநாயகி வரவேற்றார்.இதில்,பேச்சாளரும், பேராசிரியருமான வெங்கட்குமரேசன் பங்கேற்று, மாணவியர் கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் அனைத்து துறைகளிலும் சாதிக்கலாம் என மாணவியர்களுக்கு நம்பிக்கை அளித்து பேசினார்.தொடர்ந்து பல்கலைக்கழக தரபட்டியலில் இடம் பெற்ற மாணவியர் மற்றும் பருவ தேர்வுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு தாளாளர் எஸ்.பாலாஜி, பேராசிரியர் வெங்கட்குமரேசன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கி பாராட்டினர். விழாவில் துணை முதல்வர் பொற்செல்வி, தளபதி கே. விநாயகம் கல்வி குழுமத்தின் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர். ஆங்கிலத்துறை பேராசிரியர் லட்சுமிபிரியா நன்றி கூறினார்.