மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
16 hour(s) ago
இன்று இனிதாக திருவள்ளூர்
16 hour(s) ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
16 hour(s) ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
16 hour(s) ago
ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுரி, 42. கடந்த, 11ம் தேதி காலை, 6:30 மணிக்கு வீட்டின் வெளியே வாசலில் கோலம் போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீர் எடுக்க வீட்டிற்கு திரும்பியபோது, மர்ம நபர் கவுரி அணிந்திருந்த இரண்டு சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கவுரி, பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிந்து செயினை பறித்தவரை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் புழல் காவாங்கரையைச் சேர்ந்த ரமேஷ், 40 என்பவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். ரமேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago