உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

ஊத்துக்கோட்டை:சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், அன்னை பார்வதிதேவி மடியில் உறங்கும் கோலத்தில் உருவமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இந்தாண்டு சிவராத்திரி விழா, கடந்த 18ம் தேதி விநாயகர் பூஜை, கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. மறுநாள், 19ம் தேதி முதல், ஒவ்வொரு நாளும், உற்சவர் வெவ்வேறு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.சிவராத்திரி தினமான நேற்று, மாலை 6:00 மணி முதல், இன்று, விடியற்காலை 4:00 மணி வரை நான்கு கால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இன்று, மாலை 6:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் கல்பவிருட்ச வாகனத்தில் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !