உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குப்பை நகரமாக மாறி வரும் திருவள்ளூர் மணவாளநகர்

குப்பை நகரமாக மாறி வரும் திருவள்ளூர் மணவாளநகர்

கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட நகர்களில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சாலையோரம் பல இடங்களில் குப்பை குவிந்து வருகிறது. இந்த குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குப்பையில் இரைதேடும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் குப்பையில் ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெங்கத்துார் ஊராட்சியில் குப்பையை முறையாக தினமும் அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை