மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த தொழிலாளி பலி
16-Feb-2025
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டையில் இருந்து பெரியபாளையம் நோக்கி, 'தோஸ்த்' என்ற சரக்கு வாகனம், புல் ஏற்றிக் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன், 35, என்பவர் வாகனத்தை ஓட்டினார். புஜ்ஜிரெட்டி, 70, நாஜ்புல்ஷேக், 30, ஆகியோர் உடனிருந்தனர்.தண்டலம் மசூதி அருகே சென்ற போது, திடீரென நாய் குறுக்கே வந்ததால், வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.அக்கம்பக்கத்தினர் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
16-Feb-2025