உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

இணைப்பு சாலையில் நிறுத்தப்படும் லாரிகளால் போக்குவரத்து பாதிப்பு

கும்மிடிப்பூண்டி,சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பில் இருந்து, ஓபுளாபுரம் கிராமம் வரையிலான இணைப்பு சாலை உள்ளது. அந்த சாலையில், தொழிற்சாலைகள் செயல்படும் தனியார் வளாகம் உள்ளது.அந்த தொழிற்சாலை வளாகத்திற்கு வரும் கனரக வாகனங்கள், வளாகத்திற்குள் நிறுத்தாமல், மேற்கண்ட இணைப்பு சாலையில் வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், அந்த இணைப்பு சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.குறுகிய அந்த சாலை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஒருவித விபத்து அச்சத்தில் கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையம், அந்த இணைப்பு சாலையில், 'நோ பார்க்கிங்' அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். தொடர்ந்து கண்காணித்து, விதிகள் மீறி நிறுத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ