உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விண்ணப்பங்களை கையாள்வது குறித்து வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி

விண்ணப்பங்களை கையாள்வது குறித்து வி.ஏ.ஓ.,க்களுக்கு பயிற்சி

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், மொத்தம், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் வீதம் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இதில், 40 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமை அடையவில்லை. இதனால் பல கிராம நிர்வாக அலுவலர்கள் பொதுமக்கள் அரசு நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பிக்கும் போது, அதன் மீது நடவடிக்கை எடுப்பதில் தடுமாற்றம் மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து தெரியாமல் சிரமப்பட்டு வந்தனர்.இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உத்தரவின்படி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், 40 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நேற்றுமுன்தினம் பயிற்சி நடந்தது.பயிற்சியை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன் துவக்கி வைத்தார். தொடர்ந்து திருத்தணி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வெண்ணிலா பங்கேற்று, கிராம நிர்வாக அலுவலர்களின் பணிகள் மற்றும் விண்ணப்பங்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது, பிறப்பு, இறப்பு சான்றுகள் எவ்வாறு இணையத்தில் பதிவு செய்து, நிலம் சர்வே உட்பட பல்வேறு பணிகள் குறித்து பயிற்சி, செயல்முறை விளக்கம் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை