உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பார் ஊழியரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

பார் ஊழியரை மிரட்டி பணம் பறித்த இருவர் கைது

கடம்பத்துார்: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், 38. திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 24ம் தேதி இரவு பாருக்கு வந்த வெங்கத்துார் பகுதியைச் சேர்ந்த தினேஷ், 26, முனுசாமி, 31 ஆகிய இருவரும் ஆபாசமாக பேசி தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து கல்லாவில் இருந்த 500 ரூபாயை பறித்து சென்றனர். இதுகுறித்து பிரகாஷ் கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மணவாளநகர் போலீசார் இருவரையும் கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி