| ADDED : ஜூலை 11, 2024 01:16 AM
திருத்தணி:திருத்தணி அடுத்த நெமிலி காலனியை சேர்ந்தவர் ரவி மகன் லோகேஷ், 20. இவர் நேற்று முன்தினம் தன் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்வதற்கு சென்றார்.வாகனத்தை நிறுத்தி விட்டு சிறுநீர் கழிப்பதற்காக மலைக்கோவில் பகுதியில் மறைவான இடத்திற்கு லோகேஷ் சென்ற போது, மர்ம நபர்கள் இருவர் திடீரென மறைத்து வைத்திருந்த வீச்சு அரிவாளை லோகேஷ் கழுத்தில் வைத்து மிரட்டினார்.பின்னர் கழுத்தில் அணிந்திருந்த, 3 சவரன் செயின் மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். லோகேஷ் கொடுத்த புகாரின்படி திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, மலைக்கோவில் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருத்தணி பெரியார் நகர் சேர்ந்த விக்னேஷ், 24, அமிர்தாபுரம் சேர்ந்த மகிதரன், 20 ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.அவர்களிடமிருந்து வீச்சு அரிவாள், செயின் மற்றும் மொபைல் போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.