| ADDED : ஜூலை 26, 2024 02:21 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த பூந்தமல்லி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ திட்ட சிறப்பு முகாம் நடந்தது.மாவட்ட சுகாதார அலுவலர் ஜே.பிரபாகரன் தலைமையில் நடந்த மருத்துவ முகாமை, பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி துவக்கி வைத்து கர்ப்பணியருக்கு தாய்சேய் நல பெட்டகங்களை வழங்கினார். முகாமில் கூடப்பாக்கம், நேமம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த 1,500 பேர் பங்கேற்று மகப்பேறு மருத்துவம், கண், பல் மருத்துவம் குழந்தைகளுக்கான மருத்துவம், பொது மருத்துவம் எலும்பு சிகிச்சை, தோல் நோய், நரம்பியல், காது, மூக்கு ,தொண்டை மருத்துவத்திற்கான சிகிச்சை பெற்றனர். சில பயனாளிகளுக்கு உயர் மருத்துவ மேல் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டது.இதில், மாவட்ட ஒன்றியக் குழு துணைத் தலைவர் திரு.தேசிங்கு, ஊராட்சி தலைவர் ஜகதா ஜேம்ஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.