மேலும் செய்திகள்
பவானியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
23 minutes ago
இன்று இனிதாக திருவள்ளூர்
26 minutes ago
அரசு பஸ்சில் ஸ்டிக்கர் ஒட்டிய நா.த.க.,வினர் கைது
48 minutes ago
டேபிள் டென்னிஸ் எஸ்.ஆர்.எம்., பல்கலை சாம்பியன்
52 minutes ago
திருவள்ளூர்: பெருமாள்பட்டு தனியார் பள்ளியில், ஓட்டுகள் எண்ணப்படுவற்காக நடைபெற்று வரும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது. வரும், ஜூன் 4ல் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.ஓட்டு எண்ணப்பட உள்ள மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட, 'ஸ்ட்ராங் ரூம்' மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையிடம் கேட்டறிந்தார்.பின், திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டு எண்ணப்படும் அறை, அங்கு ஏற்படுத்தப்பட்ட வேட்பாளர், முகவர் மற்றும் ஓட்டு எண்ணும் அலுவலர்கள் செல்வதற்காக அமைக்கப்பட்டு வரும், வாயிலையும் பார்வையிட்டார். சட்டசபை வாரியாக ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜூன் 4ல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர், முகவர், பொது தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும். காலை 8:00 மணிக்கு தபால் ஓட்டுகளும், அரை மணி நேரம் கழித்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கையும் ஆரம்பிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
23 minutes ago
26 minutes ago
48 minutes ago
52 minutes ago