உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் கடம்பத்துார் ஒன்றியத்தில் தாராளம்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் கடம்பத்துார் ஒன்றியத்தில் தாராளம்

கடம்பத்துார்:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பங்களை, சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள் அகற்ற வேண்டும். கட்சி தலைவர்கள் படம் மறைக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நகர் பகுதி, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் அவை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், கிராமப்புறங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்களை அலட்சியம் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கடம்பத்துார், வயலுார், திருமணிக்குப்பம், புதுமாவிலங்கை உள்ளிட்ட கிராம பகுதிகளில், சாலையோரம் கட்சி கொடி கம்பங்கள், கட்சி சின்னங்கள், கட்சி தலைவர்கள் படம் தாராளமாக காணப்படுகிறது. எனவே, அதிகாரிகள் கடம்பத்துார் ஊராட்சி பகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆய்வு செய்து முறையாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நெடுஞ்சாலை உட்பட பல இடங்களில் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் மூன்று குழுக்களாக 90 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நெடுஞ்சாலையில் கார் மற்றும் இலகு ரக வாகனங்களை சோதனை செய்யும் பறக்கும் படையினர் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில இடங்களில் தேர்தல் அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வரும் தனியார் வாகனங்கள் உட்பட சில வாகனங்களை கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இது அவசர தேவைக்கு பணம் கொண்டு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன சோதனையின் போது அனைத்து வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகளிடையே எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ